மன்னை முத்துக்குமார்
கிரேக்க 'சாடிஸ' மன்னன் கலிக்யுலா - ஒரு பார்வை
-
-


'அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம்அடியோடு கெடுத்துவிடும்!'
-----------
பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு.
சில சமயங்களில் வக்கிரமான, கொடூரமான மிருகங்கள் 'அரசன்' என்றபெயரில் விரசம் புரிந்திருப்பதை வரலாறு நெடுக நம்மால் காண முடியும்!
'அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம்அடியோடு கெடுத்துவிடும்!' என்று ஆக்டன் பிரபு கூறிய பொன்மொழி உலகப்பிரசித்திப்பெற்றது.


ஆனால், சர்வாதிகாரிகள் 'அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் மிகமிகப்பரவசமானது' என்று அனுபவப்பூர்வமாக நம்பினார்கள். ரோம் சாம்ராஜ்யம்அழியக் காரணமாக இருந்தது இந்த அதிகார போதைதான்! இருப்பினும்,இன்றுவரை பல நாடுகள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத்தெரியவில்லை!


ஆகவேதான் 'வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம் -வரலாற்றிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே!'என்றார் ஒரு வரலாற்றாசிரியர்!


'இவன் எப்போது செத்து ஒழிவான்?' என்று நாட்டு மக்கள் ரகசியமாகப்பிரார்த்தனை செய்யும் அளவுக்கு வெறியாட்டம் போட்ட மன்னர்களும்நிறையப் பேர் உண்டு. அவர்களில் முன்னணியில் நிற்பவன், ரோம் நாட்டைஆண்ட கலிக்யூலா!


எந்தவொரு சர்வாதிகாரி இறக்கும்போதும், 'அப்பாடா' என்று நிம்மதிப்பெருமூச்சு விடும் மக்கள், அடுத்த கட்டத்தைப் பற்றி எச்சரிக்கையோடுசெயல்படாமல் ;தேமே'யென்று இருந்து விடுவது வரலாற்றின் விசித்திரமானசோகங்களில் ஒன்று.


ரோம் நாட்டை ஆண்டு வந்த மோசமான சர்வாதிகாரியான டைபீரியஸ் கி.பி. 37 -ல் செத்துப் போனவுடன், அடுத்தபடி யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பதுபற்றி மக்கள் கவலைப்படவில்லை! கலிக்யூலா என்ற பெயரில் மிகப்பெரியஆபத்து காத்திருப்பதை அவர்கள் சற்றும் உணராமல், டைபீரியஸ் மரணத்தைமகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தார்கள்!

கடைசிக் காலத்தில் டைபீரியஸ் வெறி பிடித்த கிழ அரசனாகஆகிப்போயிருந்தான். கொலைப்பயம் காரணமாகத் தனக்கென்று சிறுஅரண்மனையைக் கட்டிக்கொண்டு வெளியே தலைகாட்டாமல், உள்ளேசகலவிதமான செக்ஸ் வக்கிரங்களிலும் ஈடுபட்ட அவன், குறிப்பாகப் பச்சிளம்சிறுவர், சிறுமிகளையும் தன் காமப் பசிக்காக விதவிதமாகப் பயன்படுத்தஆரம்பித்தான். இதுகண்டு அவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களே கூடக்கடுப்பாகிப் போனார்கள்.

டைபீரியசுக்கு செக்ஸ் வக்கிரங்களில் அதீதக் கற்பனாசக்தி வேறு இருந்தது! 'ஸ்விம்மிங் பூல்' ஒன்றை உருவாக்கி, சிறுவர்களை மீன்வேடம் தரிக்கவைத்து,அதில் நீச்சலடிக்க வைப்பான் டைபீரியஸ். பிறகு தண்ணீருக்குள் இறங்கி,அங்கே சிறுவர்களுடன் விதவிதமான காம விளையாட்டுக்களில் ஈடுபடுவான்.

ஓரிரவு, டைபீரியஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய 'விசுவாசமான'நண்பன் ஒருவனே தலையணையால் மன்னன் முகத்தை மூடி, அதன்மீது ஏறிஅமர்ந்துகொள்ள, மூச்சுத் திணறிச் செத்துப்போனான் அந்த சர்வாதிகாரி!

இறப்பதற்கு முன்பு, முத்தாய்ப்பான ஒரு கொடிய காரியத்தைச் செய்யத்தவறவில்லை டைபீரியஸ். அது, தன் மருமகன் கலிக்யூலாவை அடுத்தவாரிசாக நியமித்தது!
''எனக்குப் பிறகு கலிக்யூலா ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் அத்தனைபேரும் 'டைபீரியஸ் எவ்வளவு நல்ல மன்னன்' என்று என்னைப்பாராட்டுவார்கள்!'' என்று வஞ்சகச் சிரிப்புடன் டைபீரியஸ் நெருக்கமானசிலரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு! டைபீரியஸ் சொன்னதுஉண்மையாகப் போனது ரோம் நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம்!

இத்தனைக்கும் 
ஜூலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன் கலிக்யூலா.அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன். 'கலிக்யூலா' என்பதுகூடப்புனைப்பெயர்தான். நிஜ முழுப்பெயர் கேயெஸ் சீசர் ஜெர்மானிக்ஸ்!


யுத்தங்கள் நடந்தபோதெல்லாம் ரோம் நாட்டு ராணுவ வீரர்களுடன் தானும்போவான் சிறுவன் ஜெர்மானிக்ஸ். ரத்தமும், கொலையும், சிதறிய உடல்களும்அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

அப்போது ரோம் வீரர்கள் இந்தக் கிறுக்குப் பிடித்த குட்டி இளவரசனுக்கு,போர்வீரர்கள் அணிவது போலவே தனி 'பூட்ஸ்' தயாரித்துக் கொடுத்தார்கள். 'கரிகே' என்றால் இலத்தீனில் 'சிறிய பூட்ஸ்' என்று அர்த்தம். 'கலிக்யூலா' என்றுபெயர் வந்தது இப்படித்தான்!


செக்ஸ் விஷயத்தில் பிஞ்சிலே பழுத்தவன் கலிக்யூலா. முதன்முதலில்கலிக்யூலா 'காதல் வயப்பட்டது' அவனுடைய சொந்த சகோதரியிடம்! வக்கிரம்பிடித்த கலிக்யூலா, தன் மற்ற சகோதரிகளையும் விட்டுவைக்கவில்லை!


மக்களைப் பொறுத்தவரை, கலிக்யூலா ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்குவிடிவுகாலம் பிறந்துவிட்டதாகத் தப்புக்கணக்குப் போட்டு, அவன் பட்டம்கட்டிக்கொண்டதை அட்டகாசமாகக் கொண்டாடினார்கள்.


நகரத்தின் மையத்திலேயே ஒரு லட்சத்து அறுபதாயிரம் மாடுகள்வெட்டப்பட்டு, சாமானிய ரோமானியர்களுக்காக இலவச விருந்துதயாரிக்கப்பட்டது. கலிக்யூலா, ராணுவத் தளபதிகளை மறக்காமல்கூப்பிட்டனுப்பி, பொன்னும் பொருளும் வாரி வழங்கினான்.

மாமன் டைபீரியசின் இறுதி ஊர்வலத்தைப் பிரம்மாண்டமாக நடத்தியகலிக்யூலா, மக்கள் தந்த பதவியை வகிக்கத் தனக்குத் தகுதி உண்டா என்கிறரீதியில் சொற்பொழிவாற்றி, பாதி உரையில் கலங்கிக் கண்ணீர்விட்டு,மக்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் அழவைத்தான்!

கொடூரமான ஓநாய் விடுகிற முதலைக் கண்ணீர் அது என்பது புரியாத மக்கள்,அரண்மனைப் படிக்கட்டுகளில் இருந்து கிழே இறங்கிவந்த கலிக்யூலா மீதுபூமாரி பொழிந்து கரகோஷம் செய்தார்கள்.


'என்னுடைய பிரஜைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நகரத்தில்மக்கள் பொழுகுபோக்க, கலகலப்பான விஷயங்கள் குறைவாக இருக்கிறது.முதலில் இந்தக் குறையை நான் போக்க வேண்டும்' என்று அலுத்துக் கொண்டகலிக்யூலா, ராணுவத்தில் ஒரு பிரிவை உண்டாக்கினான். அந்த பிரிவின்வேலை - காடுகளுக்குச் சென்று சிங்கம், புலி, யானைகள், கரடிகளைச்சிறைப்படுத்திக் கொண்டு வருவது! அந்த மிருகங்களைப் பயன்படுத்தி,மக்களுக்காக சர்க்கஸ்களைத் துவக்கிய முதல் மன்னன் கலிக்யூலா தான்.ஆனால், அது கொடூரமான சர்க்கஸ்!

'ரியாலிடி டிவி'யைப் போல ஸ்டேடியத்துக்குள் கரடிகளையும்சிங்கங்களையும் விட்டு, வீரர்கள் ஈட்டிகளுடன் அவற்றைவேட்டையாடுவார்கள். சர்க்கஸ் முடிந்த பிறகு, மைதானத்துக்குள் மக்கள்இறங்கி ஓடிக் கும்மாளம் போடலாம்! அங்கே மது ஆறாக ஓடியது.விலைமாதுக்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடி, மக்களைக் குதூகலிக்கவைத்தார்கள்.

இந்தக் கலாட்டாவுக்கு நடுவே, திருமணமாகிப் போயிருந்த களிக்யூலாவின்மூன்று சகோதரிகளின் கணவன்களும் அடியாட்களால் அடித்துத் துரத்தப்பட்டு,சகோதரிகள் கலிக்யூலாவின் படுக்கை அறைக்குக் கொண்டு வரப்பட்டதைமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!கலிக்யூலா அவ்வப்போது மந்திரிப் பிரதானிகளைப் பார்த்து, 'நான்ஒருமுறை தலையசைத்தால் போதும். உடனே உங்கள் அத்தனை பேர்தலையும் கீழே உருளும். இது எப்படியிருக்கு?' என்று இகழ்ச்சியாகச்சொல்வது வழக்கம்!

ஒரு நாள் தர்பாரில் 'உங்கள் யாரிடமும் நான் அன்பை எதிர்பார்க்கவில்லை.என்னிடம் பயந்து நடுங்கினால், அதுவே எனக்குப் போதும்!' என்று கர்ஜித்தான்கலிக்யூலா. அதற்க்கேற்ப, அவன் எதைச் சொன்னாலும், செய்தாலும்மெளனமாக நிற்பதற்கு எல்லோருமே பழகிக்கொண்டார்கள்!

'சில சமயங்களில் சாமானியர்களைப் பார்த்தால், எனக்குப் பொறாமையாகஇருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகிறார்கள். வாழ்கையைஜாலியாக அனுபவிக்கிறார்கள். நான் அரண்மனைக்கு உள்ளேயேஇருந்துகொண்டு, உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது!' என்று ஒருமுறை அலுத்துக்கொண்ட கலிக்யூலா, தானும்இரவு நேரங்களில் 'நண்பர்களுடன்' சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு விஜயம்செய்து, அட்டகாசம் போட ஆரம்பித்தான்.

அதுபோதாதென்று கலிக்யூலா புதிதாக, ஏராளமான கேளிக்கை விடுதிகளைத்திறந்து வைத்தான். எல்லா கேளிக்கை விடுதிகளிலும் 'மன்னர் வருகிறாராமா?'என்று ஆவலோடு விசாரிக்க ஆரம்பித்தார்கள். பெண்களை நிர்வாணப்படுத்தி,எல்லோர் முன்னிலையிலும் உடலுறவு கொள்வது கலிக்யூலாவுக்குப்பிடித்தமான ஒன்று!


அவன் செயல்படும்போது மற்றவர்கள் சூழ்ந்து நின்று கரகோஷம் செய்வது,அந்த வெறி பிடித்தவனின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. திடீரென்று, 'இந்தக்கேளிக்கைக் கூடத்தில் வசதிகள் சரியாக இல்லை. விலைமாதுக்களின்ஒத்துழைப்பும் போதாது' என்று குற்றம் சாட்டி, இரவோடு இரவாக அந்தக்கட்டடங்களுக்கே தீ வைக்கச் சொல்வான் கலிக்யூலா!

'எல்லோரோடும் கலந்து பழகுகிறேன் என்பதால், என்னைச் சாதாரணமாகஎடுத்துக்கொண்டு விடக்கூடாது இல்லையா? எப்போதும் ஒரு பயம் இருக்கவேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படி!' என்று இதற்க்கு விஷமச் சிரிப்போடுகாரணம் சொல்வான் அவன். இதனால், கலிக்யூலா வருகிறான் என்றாலே,விசேஷமான வரவேற்பு ஏற்பாடுகள் அவசரமாக, நடுக்கத்துடன் நடக்கும்!


கி.பி. 38. அரியணையில் அமர்ந்து ஒரு வருடம் ஆனபோது, திடீரென்றுகலிக்யூலாவுக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் வீழ்ந்தான். 'மன்னர்பிழைப்பது சந்தேகம்' என்று நாட்டில் வதந்திகள் பரவின.பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்று, அரண்மனை வெளியேநின்று கலிக்யூலாவுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

யாரும் வேலைக்குச் செல்லாததால், தொடர்ந்து விடுமுறை! சர்ச்சுகள்,கேளிக்கைகள் எல்லாம் நின்று போனது. ஒரு வாரம் கழித்துச் சரேலென்றுபடுக்கையில் எழுந்து உட்கார்ந்த கலிக்யூலா, 'எனக்கு ஜுரமெல்லாம்வரவில்லை. மறுபிறவி எடுப்பதற்காகப் படுத்திருந்தேன். இப்போது மறுபிறவிஎடுத்து விட்டேன் - கடவுளாக!' என்று இரு கரங்களையும் உயர்த்தி கம்பீரமாகஅறிவித்தான்.

'சாத்தானாக!' என்று அவன் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்!ஏனெனில், அதற்குப் பிறகு பிறகு கலிக்யூலாவின் கொடூரம் பலமடங்குஅதிகமாகிவிட்டது!


தன்னைக் 'கடவுள்' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, கலிக்யூலாவின்கிறுக்குத்தனம் உச்சத்துக்குப் போய் விட்டது. 'மீண்டும் சர்க்கஸ்கேளிக்கைகளை இன்னும் கோலாகலமாக நடத்துங்கள்' என்றுஆணையிட்டான் அவன். எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சிங்கச்சண்டையையும் வீரர்களின் வாட்போரையும் பார்த்துக் கொண்டிருப்பது?போகப் போக மக்களுக்குப் போரடிக்க ஆரம்பித்தது!

கோலாகல வீண்செலவுகள் காரணமாக, கஜானாவில் பணம் கரையஆரம்பித்தது. சிங்கம், புலியோடு சண்டை போடும் வீரர்களுக்குச் சம்பளம்குறைக்கப்பட்டதால், பல வீர இளைஞர்கள் விலகிக்கொண்டார்கள்.கடைசியில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இறைச்சி வாங்கக்கூடப்பணமில்லை!

நாற்பதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஸ்டேடியத்தில், பட்டினி காரணமாகவத்தலாக மாறிய சிங்கங்களும் தொந்தியோடு கிழ வீரர்களும் அலுப்போடுமோதிக் கொள்வதைப் பார்த்த மக்கள் கிண்டலாக 'ஒழிக... ஒழிக!' என்று குரல்கொடுத்தார்கள்.இதைப் பார்த்து கலிக்யூலாவின் கண்கள் சிவந்தன.
உடனே மக்களைக் கலாட்டா பண்ணத் தூண்டிவிட்டதாகநூற்றுக்கணக்கானவர்கள் கைது செயப்பட்டார்கள். 'கூச்சல் போட்டஇவர்களுடைய நாக்குகளைத் துண்டியுங்கள். பிறகு, இவர்களைச்சிங்கங்களுக்கு இரையாக ஸ்டேடியத்துக்குள் தூக்கிப் போடுங்கள்!' என்றுஆணையிட்டான் மன்னன்.

நாக்குகள் அறுக்கப்பட்டு, ரத்த வாசனையுடன் மைதானத்தில்விடப்பட்டவர்களைப் பார்த்துச் சப்புக் கொட்டிய சிங்கங்கள், பசியோடுஅவர்கள்மீது பாய்ந்து குதறிக்கொன்று தின்றன. முதன்முறையாக மக்கள்திகைத்தது அப்போதுதான்!

'மிருகங்களுக்கு இறைச்சி வாங்கக்கூடப் பணமில்லை' என்றதற்கு, 'அதனாலென்ன... இறைச்சிதானே வேண்டும்? சிறையிலிருக்கும் கைதிகளைத்தினமும் மிருகங்களுக்குத் தீனியாகப் போடுங்கள்!' என்று ஐடியா தந்தான்கலிக்யூலா.


அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு அடியாட்கள்கடைவீதிகளில் இப்போது வசூல் செய்வதைப் போல, கலிக்யூலாவின்பிரத்தியேகக் குண்டர் படை, வியாபாரிகளையும் செல்வந்தர்களையும் மிரட்டிவசூல் செய்ய ஆரம்பித்தது. அவர்களை அனுப்பியதே கலிக்யூலாதான்!


ஒரு நாள் தளபதி ஒருவன், 'சிவப்பு விளக்குப் பகுதிகளில்கூட வசூல் செய்துவருகிறோமாக்கும்!' என்று மன்னனிடம் சொல்லித் தொலைக்க... திடீரென்றுகலிக்யூலாவின் முகம் குரூரமாக மலர்ந்தது. அன்றிரவு, தன் சகோதரிகளைக்கூப்பிட்டு அனுப்பினான் அவன்.

'நிதி நிலைமை மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். எனக்காகஎல்லோரும் அலைந்து உழைத்துப் பணம் வசூலித்து வர, நீங்கள் சும்மாசாப்பிட்டுவிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் அந்தபுரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவே, இனி உங்களுக்கும் வேலை தரப்போகிறேன்!'என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு உறுமிய அவன், 'இனி நீங்களும்பணக்கார விருந்தாளிகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும். அதற்குப் பணம்வசூலிக்கப் போகிறேன்...' என்றான்!


மறுநாள் அவசரமாக அவையைக் கூட்டி, இந்த வக்கிரமான திட்டத்தை அவன்அறிவிக்க... எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

ஆனால் கலிக்யூலாவோ 'என் சகோதரிகளை நீங்கள் அனுபவிக்கவேண்டுமானால், ஓரிரவுக்கு ஆயிரம் பொன் நாணயங்களை எனக்குத்தரவேண்டும். என் சகோதரிகள் ராஜவம்சத்தினர் அல்லவா!' என்றுகூச்சமில்லாமல் கட்டளை பிறப்பித்தான். 'ஒவ்வொரு இரவும் யாரெல்லாம்அந்தப்புரத்துக்கு வரவேண்டும்' என்ற பட்டியலையும் அவன் போட்டுக்கொடுத்து விட்டதால், அவன் அறிவிப்பு ஒரு கட்டாய ஆணையாகி விட்டது!


சில நாட்கள் கழித்து எல்லா வி.ஐ.பி-க்களையும் மீண்டும் அழைத்த கலிக்யூலா, 'இனி உங்கள் மனைவி, சகோதரிகள், மகள்களையும் அரண்மனைக்குஅழைத்து வரவேண்டும். இதை நீங்களாக சொல்வீர்கள் என்று பார்த்தால், 'கம்'மென்று இருக்கிறீர்கள்! யார் - யாருடன் இன்பமாக இருக்கலாம், அதற்கானதொகை எவ்வளவு எனக்குத் தரவேண்டும் என்பதெல்லாம் நாளைஅறிவிக்கப்படும்' என்றான் வெறிச் சிரிப்புடன்!

வயதான ஒரு அமைச்சர் மட்டும் மன்னனின் அருகில் வந்து நின்று, மிகுந்தநடுக்கத்துடனும் தயக்கத்துடனும் 'தங்களை நாட்டு மக்கள் எல்லோருமேரொம்பத் தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்று எனக்குக்கவலையாக இருக்கிறது. ஏனெனில், மன்னரை யாராவது மனதுக்குள் தவறாகநினைத்தால்கூட என்னால் தாங்க முடியாது' என்று குரலைத் தாழ்த்திச்சொன்னார்.


அவரைப் பரிதாபமாகப் பார்த்துப் புன்னகைத்த கலிக்யூலா, 'நான் கடவுள்என்பதை மறந்துவிட்டீர்கள். கடவுள் செய்வது எதுவும் பாவகாரியம் இல்லைஎன்கிற அடிப்படை விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே!' என்றுஎடுத்துச் சொன்னான்.

தான் 'கடவுளாக' மறுபிறவி எடுத்ததை அவையில் இருக்கும்முக்கியமான ஒருவரே மறந்துவிட்டாரே என்பதால், நாடெங்கும்அதற்காக விழா எடுக்கச் சொன்ன கலிக்யூலா, கூடவே தலைநகரில்இருந்த எல்லா (முந்தைய) மன்னர்கள் சிலைகளின் தலைகளையும்உடைத்து, கழுத்துக்குமேல் தன் தலையைச் சிலையாகத் தயாரித்துவைக்கச் சொல்லி ஆணையிட்டான்.
ரோம் நகரில் தலைவர்களுக்குச் சிலைகள் வைப்பது ரொம்ப காலபழக்கம் என்பதால், ஏராளமாக நின்றிருந்த சிலைகளை மாற்றியமைக்க,நிறைய சிற்பிகள் களத்தில் குதிக்கவேண்டி வந்தது! தலைநகரம்முழுவதும் உளி, சுத்தியல் சத்தங்கள் மயம்!

மறுநாள் அவை கூடியபோது கலிக்யூலா, 'எல்லா ஐடியாக்களையும் நானேதரவேண்டியிருக்கிறது. எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் பதவிகளில்மட்டும் கம்பீரமாக உட்கார உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?'என்று எகத்தாளமாகச் சீறிவிட்டு, உச்சக்கட்டமாகத் தான் மிகவும் செல்லமாகவளர்த்த 'இன்சிடேட்டஸ்' என்னும் குதிரையை அலங்காரம் செய்து,தர்பாருக்குக் கொண்டுவரச் சொன்னான்.

மீண்டும் அங்கே ஓர் அறிவிப்பு... 'உங்கள் எல்லோரையும்விட என் குதிரைபுத்திசாலி! ஆகவே, என் அருமை குதிரையை இன்றிலிருந்து கான்சல்பதவியில் அமர்த்துகிறேன்!'('கான்சல்' பதவி என்பது, நம்ம மத்திய காபினெட்அமைச்சருக்கு இணையானது!) என்று சொன்னான்.

இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான ஆட்சியாளனின் வாழ்க்கை நீண்ட காலம்நீடிக்கவில்லை.

கலிக்யூலாவுக்கு காஷியஸ் செயிரீயா என்பவன் பிரதான மெய்காவலனாகஇருந்தான். விசுவாசமாகப் பணிபுரிந்த அவனுடைய மனதில் வெறுப்புதுளிர்விட ஆரம்பித்தது. ஒரு நாள், செய்யாத குற்றத்துக்காக இளம்பணிப்பெண் ஒருத்தியை கலிக்யூலா இழுத்துவரச் செய்து சித்ரவதை செய்யச்சொன்னான்.


அரண்மனையில், சில வீரர்கள் மாறி மாறி அந்தப் பெண்ணைப் பாலியல்பலாத்காரப்படுத்தி, விதவிதமாகச் சித்ரவதை செய்தனர். அந்தப் பெண்ணுக்குநேர்ந்த கொடுமையையும் அவளுடைய கதறலையும் கெட்ட செயிரீயா,திடீரென்று மனமுடைந்து அழுதுவிட்டான்.

அன்றிலிருந்து கலிக்யூலா அவனைப் பார்க்கும்போதெல்லாம் 'அழுகிற பாப்பா'என்கிற ரீதியில் எல்லோர் முன்னிலையிலும் தொடர்ந்து கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தான். 'ஒவ்வொரு நாளும் உனக்கு இதுமாதிரி ஒரு பெயர்சூட்டப்போகிறேன்!' என்றும் கிண்டலடித்தான்.

கி.பி. 41 -ஆம் ஆண்டு,ஜனவரி மாதத்தின் ஓர் இரவு... சிறுவர்கள் நாடகம் ஒன்றுஅரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டது ( இதுபோன்றநாடகங்களிலிருந்துதான் சிறுவர்களைத் தன் காம விளையாட்டுகளுக்குத்தேர்ந்தெடுப்பான் கலிக்யூலா!).எல்லோரும் தயாரானவுடன் கலிக்யூலாவின்பிரத்தியேக அறைக்குள் நுழைந்த செயிரீயா, 'சிறுவர்கள் வந்துவிட்டனர்' என்றுபணிவோடு அறிவிக்க...

கலிக்யூலா ஆர்வமாக வெளியே வராண்டாவுக்கு வர, 'மன்னா! இன்று எனக்குத்தாங்கள் ஏதும் பெயர் வைக்கவில்லையே?' என்றான் செயிரீயா. பலமாகச்சிரித்த கலிக்யூலா, 'ஆமாம்! மறந்துவிட்டேன்... சரி, இன்று உன் பெயர் மிஸ்டர்.உள்பாவாடை (Petticoat)!' என்று சொல்லிவிட்டு நகர... இப்போதுசெயிரீயாவிடம் இருந்து சிரிப்பு வெளிப்பட்டது.

தன் உடைவாளைச் சரேலென்று உருவினான் அவன். திகைத்துப்போனகலிக்யூலாவின் முகம் வினாடியில் வெளிறிப் போக, தொடர்ந்து மன்னனின்உடலில் வாளைப் திரும்பத் திரும்பப் பாய்ச்ச... கலிக்யூலாவின் உடல் முழுதும்ரத்தத்தால் நனைய, ஒரு வழியாகக் கிழே விழுந்து இறந்தான் அந்தகொடுங்கோலன்.

அங்கிருந்து நேராக நாடக அரங்குக்குச் சென்று, மேடையில் ஏறி நின்றுசாவதானமாகச் சொன்னான் செயிரீயா - 'மன்னர் சில நிமிடங்களுக்கு முன்செத்துப் போய்விட்டார்!' அங்கே சற்று பயங்கரமான மௌனம் நிலவியது.பிறகு கரகோஷம் ஆரம்பித்தது. நிற்காத, நீண்ட, மகிழ்ச்சி நிரம்பியகரகோஷம்...
-

நன்றி: மதனின் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்', விகடன் பிரசுரம். மற்றும் இணையம்.